நபிகள் நாயகம்



உலகின் முக்கியமான பெரிய மதங்களில் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபி (நபிகள் நாயகம்) அரபு நாட்டில் உள்ள மெக்காவில் கி.பி 571 -ம் ஆண்டு ஏப்ரல் 20 -ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் அப்துல்லா, தாயார் ஆமினா.

நபிகள் நாயகம் பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவருடைய தந்தை இறந்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு மின்னார் தாயாரும் மறைந்தார். எனவே முத்தலிபு என்ற பாடனாராலும், பின்னர் அபுதாலிப் என்ற பெரிய தந்தையாலும் வளர்க்கப்பட்டார்.  முறையான கல்வி பயிலாவிட்டாலும், சீரிய ஒழுக்கமும், நற்பண்புகளும் கொண்டர்வராக நபிகள் நாயகம் திகழ்ந்தார். இளமையில் அவர் பல துயரங்கள் அனுபவித்தாலும் வர்த்தகம் செய்வதற்காக பல பகுதிகளுக்கு சென்று வந்ததால், வாழ்க்கை அனுபவங்கள் பல பெற்றார்.
மக்களுக்கு தொண்டுகள் புரிந்தார்.

அவருடைய 25 -வது வயதில் கதீஜா என்ற 40 வயது பணக்கார விதவை பெண்ணை மணந்தார். பின்னர் சமூக சேவை ஆன்மிகச் சிந்தனைகளில் ஈடுப்பட்டார். அடிக்கடி ஹீரா மலைக்கு சென்று தியானத்தில் ஆழ்ந்தார். ஆன்மிக உணர்வு பெற்றார்.

"இறைவன் ( அல்லாஹ ) ஒருவனே, அவனுக்கு இணை, துணை யாரும் இல்லை. அவனையே வணங்கவேண்டும்" என்று போதித்தார். அக்கால அரபியர்கள் பல உருவங்களை கடவுளாக வணங்கிவந்தனர். அதற்க்கு எதிராக கருத்துக்களை சொன்னதால், நபிகள் நாயகத்தை எதிர்க்கவும் தாக்கவும் செய்தனர். அவர் தனது கொள்கைகளை விளக்க முற்பட்டபோது அவரை கல்லால் அடித்தனர். கி.பி 622 -ம் ஆண்டு தமது ஆதரவாளர்கள் சிலருடன் யத்ரிப் என்ற இடத்திற்கு சென்றார். இந்த பயணம் " ஹிஜ்ரா " என்று குறிப்பிடபடுகிறது. யத்ரிப் மக்கள் நபிகள் நாயகத்தை வரவேட்றனர். யத்ரிப் நகரின் பெயரை " மனிததுன்நபி " (நபிகள் நகரம்) என்று மாற்றினர். இதுவே பிறகு " மதினா ' ஆயிற்று. அனால் அங்கும் பின்பு எதிர்ப்பு தோன்றியது. அவரை அழிப்பதற்கு ஒரு படையை மன்னர் அனுப்பினார். அந்த படையை நபிகள் நாயகம் தோற்கடித்தார். பின்னர் மெக்கா நகருக்கு சென்றார். அங்கு தமது கொள்கைகளை போதித்தார். மக்கள் அதனை ஏற்றனர்.

மெக்காவில் வெற்றி கண்ட பிறகு மதினாவில் வாழ்ந்தார். இஸ்லாம் வேகமாக பரவியது. மீண்டும் மெக்காவிற்கு ஹஜ்  யாத்திரை சென்ற நபிகள் நாயகம், கி பி  632 ஜூன் 8 -ம் தேதி மறைந்தார். இஸ்லாம் என்ற சொல்லுக்கு, "இறைவனை பணிந்து வழிபட்டு சாந்தியடைதல்" என்று பொருள். இஸ்லாமை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள். "முஸ்லிம்" என்றல் இறைவாக்கு அடிபணிபவர் என்று பொருள். இறைதூதர் நபிகள் நாயகதிரிக்கு, வானவர் "ஜிப்ரீல்" மூலமாக இறைவனால் அருளப்பட்ட தெய்வ செய்திகளே ''திருக்குர்ஆன்" ஆகும். இதில் 115 அத்தியாயங்கள் உள்ளன.

"இறை நம்பிக்கை (ஈமான்) தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ்" ஆகிய ஐம்பெரும் தூண்களால் எழுதப்பட்ட மாளிகையே இஸ்லாம். இறைவன் ஒருவனே என்று உறுதிகொள்வது, தினமும் 5 வேளை தொழுவது, 2 1/2 சதவிதம் ஏழைவரி அளிப்பது, ரமலான் மாதம் முழுதும் நோன்பு இருப்பது வாழ்கையில் ஒரு முறையேனும் மெக்கா சென்று ஹஜ் செய்வது ஆகியவையே இஸ்லாம் மதத்தின் கடைமைகள் ஆகும்.

நபிகள் நாயகம் வாழ்ந்த பொது அவர்களின் வாக்கும், வாழ்ந்தமுறையும் பதிவு செய்யப்பட்டன. அதுவே " ஹதிஸ் " (நபிகளின் பொன்மொழிகள்) என்று அழைக்கபடுகிறது. நபிகள் நாயகம் அராபிய நாட்டில் தோன்றினாலும் அவர், அகில உலகிற்கும் ஓர் அருட்கொடை என்று திருகுரான் கூறுகிறது. தம் வாழ்நாளில் ஒரு கொள்கையைப் பிரசாரம் செய்யத் தொடங்கி 24 ஆண்டுகளில் தம்மை பின்பட்ட்ரும் ஒரு பெரும்சமுதாயத்தை உருவாகிய சாதனை சரித்திரம் நபிகள் நாயகம் அவர்களுக்கே உரியது.

0 comments:

Post a Comment

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!